வியாழன்

விஸ்வரூபம் கருத்து சுதந்திரமா?


சர்ச்சை நாயகன் கமலஹாசன் இயக்கி நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் தான் விஸ்வரூபம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த திரைப்படத்தில் முஸ்லீம்களை தவறாக சித்தரிப்பதாக முஸ்லீம்கள் திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்ததின் காரணமாக அந்த திரைப்படத்தை வெளியிட தற்காலிக தடை விதிற்கும் அளவுக்கு சென்றுள்ளதும் அனைவரும் அறிந்த விடயம்தான்.  .எப்பொழுதுமே கமல் தனது படங்களில் முஸ்லீம்களை தவறாக சித்தரித்தும் கேலிசெய்வது போன்ற காட்சி அமைப்பது நாம் அறியாத ஒன்றல்ல.

சரி இப்பொழுது விசயத்துக்கு வருவோம். கமலஹாசன் தான் விரும்பியதை திரைப்படமாக எடுப்பதில் தவறு இல்லை. இது ஜனநாயக நாடு இங்கு ஒருவர் தனது கருத்தை திரைப்படமாக எடுக்க அவருக்கு முழு சுதந்திரம் உண்டு. அதை எதிர்ப்பது கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பது போன்றது என்றெல்லாம் சிலர் கருத்து கூறி வருகின்றனர். 

முதலில் ஒன்றை சொல்லிவிடுகின்றேன் கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் என்று புலம்புகின்றவர்கள் ஒன்றை மனதில் வைத்துகொள்ள வேண்டும். கருத்து சுதந்திரம் என்பது என்ன அதற்கான அளவுகோல் என்ன என்பதை விளங்க வேண்டும். நமது ஊரில் பொதுவாக சுதந்திரத்தைப் பற்றி ஒன்றை சொல்லுவார்கள். அதாவது நமது சுதந்திரத்தின் எல்லை கோடு எதுவரை என்றால் நாம் நமது கையை நீட்டினால் நமக்கு எதிரில் இருக்கும் நபரின் மூக்கு நுனி வரை நமது சுதந்திரம் நமக்கு உண்டு. நமது கை நமக்கு முன்பிருக்கும் நபரின் மூக்கு நுனியில் பட்டுவிட்டால் நாம் அவரின் சுதந்திரதில் கை வைத்து விட்டோம் என்று பொருள். அது போல கமல் தனது கருத்தை சொல்லலாம் எதுவரை என்றால் முஸ்லீம்களின் மூக்கு நுனி மீது கமலின் கை படும் வரை. முஸ்லீம்கள் கமல் நீட்டிய கை எங்கள் மூக்கு நுனியில் படுகின்றது ஆகவே கமலஹாசன் தனது கையை மடக்கி கொள்ள வேண்டும் என கூறுகின்றார்கள். இது எந்த வகையில் கமலின்  கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதாகும்.

கமலஹாசன் அவர் எடுக்கும்  திரைப்படங்களில்  தன்னை பற்றி எதுவேண்டு மென்றாலும் சொல்லலாம் அது  அவர் கருத்து சுதந்திரம். தான்  நாத்திகன் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை  என சொல்வது அவர் உரிமை. அதே நேரத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லாம் பைதியகார்கள் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியுமா. அது போல தாங்கள் திரைப்படம் எடுக்கலாம் தவறு இல்லை அதே நேரத்தில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வேறு ஒரு சமூகத்தை பற்றி தவறாக சித்தரித்து இது கருத்து சுதந்திரம் என்று ஜல்லி அடித்தால் அதை  ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.  

கமல் தான் விரும்பிய அனைத்தையும் சொல்லும் உரிமை  இருக்கிறது. அது எதுவரை என்றால் மற்றவர்களின் மனதை புண்படுத்தாத வரை  மட்டுமே. கருத்து சுதந்திரத்தை பற்றி பேசுபவர்கள் முதலில் இதை புரிந்து  கொள்ள வேண்டும்.  

24 கருத்துகள்:

Unknown சொன்னது…

கருத்து சுதந்திரம் பற்றிய அருமையான விளக்கம்...முஸ்லிம்கள் கொடுக்கவேண்டிய பல விளக்கங்கள் முஸ்லிம் அல்லாத பல சகோதரர்களின் வாயிலாக வருவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்..! சிலர் செய்கையால் நாங்கள் சங்கடங்களை அடைந்தாலும் உங்களை போன்றோரின் வருகை முஸ்லிம் மக்களுக்கு மருந்தாக அமைகிறது .!! (நன்பேண்டா)

நன்றி !!!

Unknown சொன்னது…

finr

Unknown சொன்னது…

good

ஆமினா சொன்னது…

எனர்ஜி டானிக்!

நன்றி :-)

UNMAIKAL சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
வலையுகம் சொன்னது…

உண்மையிலேயே நீங்கள் நேர்மையான நண்பன் என்பதை நீறுபித்து இருக்கிறீர்கள் நன்றி நண்பரே

Unknown சொன்னது…

//ஒரு சமூகத்தை பற்றி தவறாக சித்தரித்து இது கருத்து சுதந்திரம் என்று ஜல்லி அடித்தால் அதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.//
தவறாக சித்தரித்தார் என்று எதை வைத்து சொல்கின்றீர்கள்?
உங்களுக்கு விஸ்வரூப பிரத்தியேக காட்சி எப்போது காட்டப்பட்டது?
வன்முறையாளர்களின் கருத்துக்கு ஏன் இவ்வளவு போராட்டம்?
உண்மையை வாழ விடுங்கள்!
அரபு நாடுகளை போன்று இங்கயும் உண்மையை கொள்ளாதீர்கள்!
தனி மனித (மனித சமூகத்தின்) சுதந்திரத்தை பறிக்க எத்தனிக்காதீர்கள்!
நன்றி,

Unknown சொன்னது…

//தவறாக சித்தரித்தார் என்று எதை வைத்து சொல்கின்றீர்கள்?
உங்களுக்கு விஸ்வரூப பிரத்தியேக காட்சி எப்போது காட்டப்பட்டது?//

ஐயா ராசு உங்களுக்கு வேற விதமாத்தான் சொல்லணும் போல..!

உலகிலேயே அழகிய நகரம் லண்டன் என்பீர்கள்..எத்தனை பேரு போய் அதை பார்த்திருப்பார்கள்..பார்த்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள் அவ்வளவு தான்...நிலவுல காற்று இல்லை என்பதும் அங்கு போய் பார்த்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள் ... அதே போல் படம் பார்த்தவர்கள் தான் கொந்தளித்து இருக்கிறார்கள்...அவர்கள் சொன்னால் மட்டும் கேட்க மாட்டீர்களா..?

Unknown சொன்னது…

ullgukay therium theeveravatham angirundhu varrugindrathendru muthlil athai nirutha sollungal muslimgalai

Unknown சொன்னது…

pakistan. iraq,afgan,syria,ymen mattrum palla nattil nadapadhin pair annvam.mudhalil friday prayer samayathi boom blast aagindrathey athai warn seuingal unmana muslim nanbarglay

Unknown சொன்னது…

கமல் செய்த மிகப்பெறிய தவறு, பகுத்தரிவற்றவர்களுக்கு விஸ்வரூபத்தை போட்டு காண்பித்ததுதான்.
"விஸ்வரூபம் பார்க்க கொஞ்சம் உலக அறிவு வேண்டும் என்று அவரே சொல்லி விட்டு இப்படி கிணற்றுத்தவளைகளிடம் மாட்டிக்கொண்டு விட்டாரே நம்மவர்.

UNMAIKAL சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
UNMAIKAL சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
வலையுகம் சொன்னது…

நீர்ப்பறவை படகுழுவிடம் கமல் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கு. தமிழக கடலோர கிராமங்களிலுள்ள உழைக்கும் அடித்தட்டு இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையை சமய நல்லிணக்க வாழ்வை மிக அழகாக படம்பிடித்து திரைத்துறையில் ஒரு நல்ல செய்தியை கொடுத்தார்கள். இதனை எந்த முஸ்லிமும் எதிர்க்கவில்லை என்பதையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

karuppu சொன்னது…

மனதைப் புண்படுத்துவது என்பது தெளிவு சிறிதுமற்ற ஒரு வாதமாகும். கலிலியோவும், கோபர்நிகசும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மனம் புண்படும் என்று யோசித்திருந்தால் இன்றுங்கூட நாம் பூமி தட்டையானதென்றும், பூமியே பிரபஞ்சத்தின் நடுப்பகுதி என்று நம்பிக் கொண்டிருப்போம். கருத்து சுதந்திரம் என்பது மக்களாட்சியின் இன்றியமையாத அங்கமாகும். விஸ்வரூபம் சில நாட்களில் வலைப்பதிவர்களால் போற்றவும் படலாம், தூற்றவும் படலாம். எனக்கும் அது பிடிக்காமற் போகலாம். ஆனால் குறிப்பிட்ட சில அடிப்படைவாத அமைப்புகள் கூறுவதால் மட்டும் தணிக்கைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படத்தைத் தடை செய்வது கருத்து சுதந்திரம் செத்துப் போன நாட்டில் வாழ்கிறோம் என்பதையே காட்டுகிறது.

Unknown சொன்னது…

மிஸ்டர் கருப்பு

//மனதைப் புண்படுத்துவது என்பது தெளிவு சிறிதுமற்ற ஒரு வாதமாகும். கலிலியோவும், கோபர்நிகசும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மனம் புண்படும் என்று யோசித்திருந்தால் இன்றுங்கூட நாம் பூமி தட்டையானதென்றும், பூமியே பிரபஞ்சத்தின் நடுப்பகுதி என்று நம்பிக் கொண்டிருப்போம். //

நீங்க சொல்லுறது வாஸ்தவம்தான்..அதுக்காக இதை சொல்லி விஜயகாந்த் மேல அம்மா போட்ட அவதூறு வழக்கை வாபஸ் வாங்கமுடியுமான்னு பாருங்களேன்..! முடியாது. ஏன்னா அது அறிவியல். இது அவதூறு ..ரெண்டையும் போட்டு ஏன் இப்படி பருப்பு கடையிறது போல் கடையிரீங்க கருப்பு !

//தணிக்கைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படத்தைத் தடை செய்வது கருத்து சுதந்திரம் செத்துப் போன நாட்டில் வாழ்கிறோம் //

மறுபடியும் பருப்பு மாதிரி பேசக்கூடாது..! டேம் 999 படத்தையும் தணிக்கை குழு அனுமதியோட தானே வந்தது .அதை விட்டீர்களா நீங்கள்.."பயர்" என்கிறபடமும் "தி டாவின்சி கோட்" என்கிற படமும் எதிர்ப்பு தெரிவித்தீர்களே ! அதுவும் தணிக்கை குழுவைதாண்டி தானே வந்தது..முன்னுக்கு பின் முரனா பேசுவதே வாடிக்கையாகிவிட்டது...

இனி தணிக்கை குழுவை பற்றி யாரேனும் பேசினால் தயவு செய்து பதிவர்கள் அவர்களை தணிக்கை செய்து விடுங்கள்..தொல்லை தாங்க முடியல நாராயணா..!!!

karuppu சொன்னது…

மன்னிக்கவும். திரு.மீரான், டேம் 999 படத்தைத் தடை செய்ததும் தவறே. டாவின்சி கோட் படத்தை நான் பார்த்திருக்கிறேன். அருமையான திரில்லர் திரைப்படம். திரைப்படங்களையும், புத்தகங்களையும் தடை செய்வது கருத்துரிமை செத்துப் போனதன் மிகத் தெளிவான அறிகுறி. நீங்கள், நீங்கள்னு சொல்றீங்களே, நான் அதப்பத்தி எங்கயாவது எழுதிருக்கேனான்னு படிச்சுப் பாத்துட்டுப் பேசுங்களேன். நீங்கள் தான் தனிமனித தாக்குதலையும், கருத்துரிமையையும் பற்றிப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். உங்களின் இந்த அடிப்படைவாதம் இஸ்லாமியர்களைப் பற்றிய மிகத் தவறான (அல்லது மிகச்சரியான! எது உண்மை என்று எனக்குத் தெரியாது) புரிதலுக்கே தமிழ் சமூகத்தை இட்டுச் செல்லும்.


- செகு - சொன்னது…


விவாதச்சுவைக்காக அன்பர் கருப்பு கூறியதை மேலோட்டமாக பார்த்தால் மிகச் சரியான பதில் போன்று தோன்றினாலும், கலிலியோவும் கோபர்நிகசும், திரைப்படக் கலையை/பிரச்சனைகளை விவாதித்து அல்லது விதைத்து, பணத்தை அறுவடை செய்யும் கமலுக்கு இணையாக எப்படி ஒரே நேர் கோட்டில் வந்தார்கள் என்று புரியவில்லை. ஒரு வாதத்திக்கு கமலின் விஸ்வரூபம் சொல்வது சரி என்று எடுத்துக் கொண்டாலும் - கமல் என்னும் ஒருவர் கருத்துச் சுதந்திரத்தின் மூலமாக கூற்றித்தான் இது உலகத்திற்கே தெரியவேண்டும் என்ற நிலை இல்லை - அது வேறு.... இந்தப் புவியின் ஆதார அறிவியல் உண்மையை உலகிற்கே முதன் முதலாக கலிலியோவும் கோபர்நிகசும் எடுத்துச் சொல்வது என்பது வேறு.

கமலே இத்திரைப்படத்தினை பல வாரங்களாக பல காரணங்களுக்காக தள்ளித் தள்ளி வைத்துள்ளார். இன்னும் இரண்டு நாட்களோ (நீதிமன்ற உத்தரவு ), இரண்டு வாரங்களோ (தமிழக அரசு ), தள்ளி வைப்பது கருத்துச் சுதந்திரம் செத்துப் போனது என்பதாகக் கருதினால் - ஏன் இந்தக் கலைவெறி - மன்னிக்கவும் கொலவெறி ?? தாங்கமுடியல்ல.

Unknown சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Unknown சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
karuppu சொன்னது…

நான் கலிலியோவையும், கோபர்நிகசையும் கமலுடன் ஒப்பிடவில்லை. பிறர் மனதைப் புண்படுத்துவது என்பது எவ்வளவு தெளிவற்ற வாதம் என்பதை விளக்கவே நான் அவர்களைப் பற்றிக் கூறினேன். ஒரு சில அடிப்படைவாத அமைப்புகள், தங்கள் அடிப்படைவாத ஓட்டுவங்கியை உபயோகித்து, மறைமுகமாக நாங்கள் வன்முறையில் இறங்குவோம் என்பதை வெளிப்படுத்தி, ஒரு அரசைப் பயமுறுத்தி அதிகாரப்பூர்வமான ஒரு தணிக்கை அமைப்பின் அங்கீகாரத்தையும் மீற வைக்கும் நிலையை உருவாக்கியதாலேயே நான் கருத்து சுதந்திரம் செத்துப் போன நாடு இது என்றேன். தொடர்ச்சியாக சில வருடங்கள் செய்தித்தாள் படிப்பவராயின் அடிப்படைவாதிகளின் முன்னேற்றத்தை நீங்களும் கவனித்திருப்பீர்கள் என்று கருதுகிறேன்.

UNMAIKAL சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
உதயம் சொன்னது…

பாரம்பரிய தமிழ் கலாச்சாரம், தமிழார்வம், தமிழிலக்கிய தொண்டு, தனித்தன்மையான வட்டார மொழி வழக்குகள், என்றெல்லாம் தமிழக முஸ்லிம்களுக்கென்று வரலாறுகள் இருந்தாலும், தமிழ் சினிமா இன்னும் " நம்பள்கி, நிம்பள்கி" என்று தமிழை தப்புத்தவறாய் பேசும் அந்நியர்களாகத்தான் முஸ்லிம்களை பதிந்து வருகிறது. ஏன் இந்த சித்தரிப்பு?

முஸ்லிம்களை நல்லவர்களாகவும் அல்லது வில்லன்களாகவும், நண்பர்களாகவும் காட்டிய காலம் போய், தீவிரவாதிகளாகவும் காட்டினார்கள். முஸ்லிம்களில் தீவிரவாதிக்கா பஞ்சம்? பொறுத்துக்கொண்டோம். ஒரு தனிப்பட்ட மனிதனை எப்படி வேண்டுமானாலும் காட்டலாம். அதெல்லாம் கருத்துச்சுதந்திரம்.

இந்நிலையில், தொடர்ந்து ஒரே மாதிரியாக விஜயகாந்தும், அர்ஜுனும் இன்ன பிற...ரது படங்களிலும், தீவிரவாதி என்றால் முஸ்லிம்கள் என்று பொதுப்புத்தியில் ஆணி அடிப்பது போல திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வந்தது. சங்கடமாக இருந்தாலும் எதிர்க்கும் அளவு சூழ்நிலை இல்லை. குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்டதெல்லாம் முஸ்லிம்களே. ( நன்றாக அவதானிக்கவும் "கைது செய்யப்பட்டது" என்று தான் குறிப்பிட்டிருக்கேன்)

சமீப காலமாக, குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் எல்லாம் அப்பாவிகள் என்று நீதி மன்றத்தால் பல ஆண்டுகளை சிறையில் இழந்து விட்டு நிரபராதியாக வெளியே வருகிறார்கள். இவர்கள் நிரபராதி என்றால் யார் குற்றவாளி?? என்று ஆராயும் போது, அதே குண்டு வெடிப்புகளுக்கு "இந்துத்துவ தீவிரவாதிகள்" கைது செய்யப்பட்டு வருவதும், முன்னாள் உள்துறை அமைச்சர் "காவி தீவிரவாதம்" என்று ஒன்று இருப்பதாக நாடாளுமன்றத்திலே ஒத்துக்கொண்டதும், அதனை தொடர்ந்து தற்போதைய அமைச்சர் ஷிண்டே வும் பிஜேபியும், ஆர்.எஸ்.எஸும் பயங்கரவாத பயிற்சி முகாமே நடத்துகின்றன என்கிறார்.

இந்த சூழ்நிலையில் தான் "துப்பாக்கி" திரைப்படம் தனது வழமையான "முஸ்லிம் தீவிரவாதி" என்ற லேபிளுடன் வருகிறது. அதில் உச்சக்கட்ட அதிர்ச்சி. அதில் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமூகத்தையே சந்தேகப்படுத்தும் வகையில் "ஸ்லீப்பர் செல்" என்ற புதுவகையான உத்தி கையாளப்படுகிறது. தீவிரவாதி ஒரு சாதுவாக மக்களோடு மக்களாக கலந்தே இருப்பான், ராணுவத்திலும் உயர்பதவிகளிலும் கூட கலந்திருக்கலாம் என்ற விஷ விதையை தூவி விடுகிறார்கள். இது ஒரு அப்பட்டமான முஸ்லிம் எதிர்ப்புப்படம் என்று முஸ்லிம்கள் உணருகிறார்கள். ஏற்கனவே இந்துத்துவாவின் குண்டு வெடிப்புகளுக்கு தாங்கள் தீவிரவாத பட்டமும் பழியை சுமக்க நேரிட்டு வருகிறதே என்ற இயலாமையும், ஒவ்வொரு குண்டு வெடிப்பு வழக்குகளிலும் காவி தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையிலும், மேலும் மேலும் எங்களையே இந்த சினிமாவினர் குற்றம் சுமத்தி வருவது யாரை திருப்தி படுத்த என்று ஒரு இயல்பான கொந்தளிப்பு முஸ்லிம்களிடையே உருவாகிறது. அதனால் துப்பாக்கியை எதிர்க்க துவங்குகிறார்கள்.

பொதுவாக ஒரு சமூகத்திற்கு எதிராக இது மாதிரி ஆபத்து வரும் போது எல்லோரும் ஒன்றிணைவது இயல்பே. சண்டையிட்டு பிரிந்து கிடந்தவர்களெல்லாம் ஒரு கருத்திற்காக (துப்பாக்கியை எதிர்ப்பது) ஒன்றிணைகிறார்கள்.எதிர்ப்பு தமிழ் முஸ்லிம் சமூகம் காணாதது. அந்தக் கொதிப்பு அடங்கும் முன்னே (இதில் நீர்பறவையில் சமுத்ரகனியின் பேச்சு முஸ்லிம்களுக்கு பெரிய ஆறுதல்) விஸ்வரரூபமும் தீவிரவாதத்தை கதைக்கருவாகக் கொண்டு வரவே, சொல்ல வேண்டுமா எதிர்ப்புக்கு!!

இந்துத்துவாவினர்களின் குண்டு வெடிப்புகளுக்கும் சேர்த்தே தீவிரவாதி பட்டம் சுமந்தாகி விட்டது. இந்த சமூகத்தின் வலியையும் வேதனையும் புரிந்து கொள்ள முயலுங்கள். கமல் எங்களுக்கு எதிரியல்ல; துரதிஷ்டவசமாக விஸ்வரூபத்தின் கதைக்களம் ஆப்கனில் நடப்பதால் கமலுக்கும் வேறு வழியில்லை. இது தொடராமல் இருக்க வேண்டுமானால், எங்களுக்கும் இதற்கு வேறு வழியில்லை.

UNMAIKAL சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

கருத்துரையிடுக